பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

135

நோக்கி முருகன்போல் மக்களைப் பெறுவான் என்று கூறினாள் என்பார் உரையாசிரியர் திரு. நகராமலை நா.இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இவை தப்புமாயின்... தீண்டிலேனே' என்றது சூள்மொழி; குறி தப்பாது என்பது தெளிவிக்க வந்தது.

அருணம் -சிவப்பு; வருணம் -வனப்பு; மகிழ்நன் - கணவன்; தநயர் மக்கள்; குறக்கூடை குறம்பாடிப் பெற்ற தவசம் முதலியன வைத்துக் கோடற்குரிய கூடை.

70. நடுமரங்கள் மறம்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

தீண்டரிய மடற்பனையின் சருகை வாரிச் சிற்றிரும்பால் சுற்றிவரச் *செதுக்கிக் கூட்டி

நீண்டதுவும் இருண்டதுமா வரைந்து சுற்றி நிருபமெனக் கொடுத்தெதிரே நிற்கும் தூதா! தாண்டவமா டும்பரனார் அருணை நாட்டில்

தருமறப்பெண் தனைவேண்டிச் சமரில் போந்து மாண்டவரே றியகோணல் வளைகள் நாங்கள்

வருங்கல்வழி வாயில்நடு மரங்க ளாமே.

(69)

(பொ-ரை) தொடுதற்கு அரிய மடல்களையுடைய பனையின் ஓலையை எடுத்துச் சிறிய இரும்பாம் எழுத்தாணி யால் நாற்புறமும் செதுக்கி ஒழுங்கு செய்து, நீண்டதாகவும் கறையுடையதாகவும் எழுதிக் கயிற்றால் சுற்றிக் கடிதம் என்று கொடுத்து, எம் எதிரில் நிற்கும் தூதனே, தாண்டவம் புரியும் பெருமானின் திருவருணை நாட்டில் இன்பம் தரும் மறக்குடிப் பெண்ணை விரும்பி வந்து போரில் மாண்டு போனோர் எண்ணற்றவர்; அவர்கள் ஏறி வந்த சிவிகையின் வளைந்த மூங்கில்களே நாங்கள் வரும் கற்கள் நிரம்பிய காட்டு வழியின் வாயிலில் நட்டிய வளைவு மரங்களாகும்.

(வி-ரை) மறக்குடிப் பிறந்த மகளை மணம் பேசி வருமாறு மன்னவர் தூது அனுப்ப, அத்தூதனைப் பார்த்து மறவன் மகண் மறுத்து உரைப்பதாகச் செய்யுள் செய்வது மறம் என்பதாகும். இதனை 'மகண் மறுத்துரைத்தல்' என்றும் கூறுவர். "வெம்மூரணான் மகள் வேண்ட அம்மதிலோன் மறுத்துரைத்