பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திருவிளையாடல் அம்மானை *

205

நீர்வேட்கையைத் தவிர்த்தாரே ஆயினால் புலிக் கொடியினனான சோழனுக்குச் சிறந்த அருளை ஏன் செய்திலர் அம்மானை; (அவனையும் அழித்தார் அல்லர்) அவனை மன்னித்துப் போகவிட்டுக் காத்தார் அம்மானை.

-

(வி-ரை) சொன்னம் - சொர்ணம் (பொன்); தென்னவன் பாண்டியன்; பொன் அழகு, சிறப்பு; புலிக்கொடியான் சோழன்.

புலிக்கொடியான் - புலியைக் கொடியில் கொண்டவன்; புலிபோன்ற கொடியவன்.

=

பாண்டியனுக்கு உதவியாக நின்றாலும் சோழனையும் இறைவர் அழித்திலர் என்பாராய்ப் போற்றுவார் என்றார். கொடி ஒழுங்கு; புலியாம் கொடியவன் -புலிப் பெயரமைந்த தவவொழுக்கமுடைய முனிவன். 'புலிக்கால் முனிவன்'; புலிக்கால் முனிவன் போற்றும் இறைவர் ஆகலின், 'புலியாங் கொடிய வனைப் போற்றுதல் இயல்பு' என்றார் என்றும் கொள்க.

36. இரசவாதம் செய்தது

(திருப்பூவணத்தைச் சார்ந்த

பொன்னனையாள்

சிவபெருமான் உருவைப் பொன்னால் செய்விக்க விரும்பினாள். அதற்காக அவள் வீட்டில் இருந்த வெண்கலம் பித்தளைப் பாத்திரங்களைப் பொன்னாக்கி அருள் செய்தார் இறைவர்.)

ஈசர்சொக்கர் பூவணத்தி லேயிருந்த பொன்னனையார் மாசிலர்க்கன் போடுங்காண் வாதத்தார் அம்மானை; மாசிலர்க்கன் போடுங்காண் வாதத்தார் ஆமாகில் பேசுவதென் ஐயமறப் பித்தரென்றே அம்மானை; பித்தரென்பா ரையரென்றும் பேசுவார் அம்மானை.

(பொ-ரை) சொக்கநாதர் திருப்பூவணத்தில் இருந்த பொன்னனையார் என்னும் குற்றமற்றவர்க்கு அன்போடு இரசவாதம் செய்தார் அம்மானை; குற்றமற்ற பொன்னனை யார்க்கு அன்போடு இரசவாதம் செய்தாரானால், அவரை ஐயமின்றிப் 'பித்தர்' என்று உலகோர் கூறுவதென்ன அம்மானை; அவரைப் பித்தர் என்று சொல்வாரும் சொல்ல, ஐயர் என்று சொல்வாரும் சொல்வர் அம்மானை.