பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம் -38 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

3. செண்டிருக்கும் வடவரையில் சேவிருக்கும் அரசிருக்கும் தென்னர் ஈன்ற கண்டிருக்கும் மதுரமொழிக் கனியிருக்கும் துவரிதழ்அங் கயற்கண் பாவை

வண்டிருக்கும் நறைக்கமல மலரிருக்கும்

பரிபுரத்தாள் மனத்துள் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்முனிவன் குடியிருக்கும் பொதியமலைக் குறத்தி நானே.

(தெ - ரை.) “அம்மே, கரிகால் சோழனால் அறையப்பட்ட செண்டின் அடையாளம் இருக்கும் இமயமலையில் மீன் அடையாளம் பொறித்து வைத்து ஆட்சிபுரியும் பாண்டியர் பெற்ற கற்கண்டு போன்ற இனிய மொழியையும், கொவ்வைக் கனி குடியிருந்தாற் போன்ற செவ்விதழையும் உடையவளும் அங்கயற்கண்ணி என்னும் திருப்பெயருடையவளும் ஆகிய அம்மையின் வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்போன்ற சிலம்பணிந்த திருவடிகளைத் தன்மனத்துள் வைத்திருக்கும் அகத்திய முனிவன் குடியிருக்கும் பொதியமலைக் குறத்தி நான்?"

-

(அ - ள்) செண்டு -ஒரு கருவி; கோடரி போன்றது; சேல் - மீன்; தென்னர் பாண்டியன்; கண்டு - கற்கண்டு; மதுரம்- இனிமை ; துவர் - செம்மை. பவழம்; நறை மணம், தேன்; கமலமலர் - தாமரை மலர்; பரிபுரம் - சிலம்பு; தாள் - திருவடி; தமிழ் முனிவன் - அகத்திய முனிவன். "பாவை பரிபுரத் தாள் மனத்துக் கொண்டிருக்கும் முனிவன் மலைக்குறத்தி நான்" என இயைக்க.

சிந்து

4. மங்கை குங்குமக் கொங்கை பங்கயச்

செங்கை அங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள்

பங்க னைக்கழல் அங்க னைச்சொக்க

லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே.

(தெ-ரை.) கொல்லிப் பாவை போன்றவளே, நீ மங்கையும் செஞ்சாந்து அணிந்த மார்பினளும் செந்தாமரை மலர் போன்ற கையினளும் கயல்மீன் போன்ற கண்ணினளும் மறைநூல்களால் பாடப்படுபவளும் ஆகிய மீனாட்சியம்மையை

டப்பாகமாகக்