பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

263

நெகிழுமாறு ருமலைகள் போன்ற மார்புகளால் தழுவி நின்றதும், ஊடல் கொண்டு அகன்றோடி இன்பம் தந்ததும், இறைவர் பேரருளுக்கு உள்ளாகி அமைந்து நின்றதும், நிலை பெறக் கண்டுகொண்டே களிப்புற எப்பொழுது வாய்க்கும்?

(அ - ள்.) இரா நின்றது முதலிய இன்ப விளையாடல்கள் சீகாளத்தி புராணம் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது. இரா - இரவு (இருள்) குவடு - மலை; பொர - போரிட, தழுவ; சில பூசல் - சிறுபூசல் (ஊடல்) சில என்பது சிறுமைப் பொருள் தந்தது. புலவி நலம் ஊடல் இன்பம். "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்" என்பது திருக்குறள். மணவாளர் - கணவர்; “என் நெஞ்ச மணவறை என்று வாய்க்கும் என இயைக்க.

நேரிசை வெண்பா

3. மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கள் அடியார்க்(கு) உடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் கொடியார்க்(கு) இவைகொல் குணம்.

(தெ - ரை.) மதம் பெருகிய மூன்று கண்களையுடைய ளமையான யானையாம் மூத்த பிள்ளையாரைப் பெற்று மாடமதுரையிலே இருந்த உள்ளம் கவரும் கள்வியாகிய மீனாட்சியம்மை, பாணபத்திரர் என்னும் இசைவாணருக்கு அடியாராகிய சிவபெருமானுக்கு உடம்பை இரு கூறுபட ஆக்கினாள்; இதனை ஆராய்ந்து பார்த்தால் கொடிபோன்ற அம்மைக்கு (மகளிர்க்கு) அருட்குணம் இல்லை போலும்.

-

(அ - ள்) மழ களிறு இளைய யானை; "மழவும் குழவும் ளமைப் பொருள்" என்பது தொல்காப்பியம். கதம்பவனம் கடம்பவனம். எதுகை நோக்கி 'ட' 'த' வாகத் திரிந்தது. கடம்ப மரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்து இருந்தமையால் மதுரைக்கு அஃதொரு பெயர். மதங்கன் பாடுவான்; அவன் பாணபத்திரன்; பாணபத்திரனுக்கு அடியாராக வந்து இறைவன் அருளியது, திருவிளையாடற்புராணம் விறகு விற்ற படலச் செய்தியாகும்.

-

'பண்தரு விபஞ்சி பாண பத்திரன் அடிமை என்றான் என்பது இறைவன் அடியாராகியதைச் சுட்டும்.(24)