பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

மீனாட்சியம்னை குறம்

267

(அ - ள்.) பதுமம் - தாமரை; வல்லி - கொடி; பாதபத்மம் திருவடித் தாமரை; வைத்தவா - வைத்தவாறு; மத்தம் - ஊமத்தை; மத்தப்பித்து மதிமயக்கப்பித்து; ஏழைமை அறியாமை; சிலை வில்; மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழிக்கச் சென்றவர் சிவபெருமான் என்னும் கதையை உட்கொண்டது "மத்தினைப்...புராந்தகர்க்கே" என்பது. புரம் - முப்புரம்; அந்தகர் - அழித்தவர்.

நேரிசை வெண்பா

9. தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றில் அகமேஎன் நெஞ்சகமே தானால்-மகிழ்நரொடும் வாழாநின் றாயிம் மனைஇருள்மூ டிக்கிடப்ப(து) ஏழாய் விளக்கிட் டிரு.

(தெ-ரை.) மீனாட்சியம்மையே, கணவரொடும் ஒன்றி உறைபவளே, நின் தகுதியுடைய சிறிய மனையே என் மனமாகிய இடமானால், இம் மனை இருள்மூடிக் கிடக்கின்றது; அம்மையே, இதில் விளக்கேற்றி வைத்து இனிது குடியிருப்பாயாக.

(அ - ள்) கடம்பவனம் - மதுரை சிற்றில் - சிறிய வீடு; அகம் - மனம். 'அகமே தகும் இல்' என இயைக்க. மகிழ்நர் கணவர்; வாழா நின்றாய் -வாழ்கின்றாய்; ஏழாய் - பெண்ணே, இவண் மீனாட்சியம்மையே என விளி. விளக்கு - மெய்யறிவாகிய உள்ளொளியாகிய விளக்கு. "உள்ளொளி விளங்கப் பெற்ற உடலமே தெய்வத் திருக்கோயில்" என்க. "ஊனுடம்பு ஆலயம்", "உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான்" என்னும் சான்றோர் திருமொழி கருதத் தக்கன.

கட்டளைக் கலித்துறை

10. இரைக்கு நதிவைகை பொய்கைபொற் றாமரை யீர்ந்தண்டமிழ்

வரைக்கு மலைதென் மலயம

தேசொக்கர் வஞ்சநெஞ்சைக்

கரைக்கும் கனகள்வி *கர்ப்பூர

வல்லிக்குக் கற்பகத்தால் நிரைக்கும்பொற் கோயில் திருவால

வாயுமென் நெஞ்சமுமே.