பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

காப்பு

(எடுத்துக்கொண்ட நூல் இனிது முடியுமாறு இறைவனை

வேண்டுதல்.)

கைக்கோட்டு வாரணமே காப்பு

நேரிசை வெண்பா

அன்னவயல் சூழருணை அண்ணா மலையார்மேல் மன்னும் கலம்பகப்பா மாலைக்குத் - துன்னியசீர் மெய்க்கோட்டு மேருவெனும் வெள்ளேட்டின் மீதெழுதும் கைக்கோட்டு வாரணமே காப்பு.

(பொழிப்புரை) அன்னங்கள் வாழும் வயல்களால் சூழப்பெற்ற திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் அண்ணா மலையாரின் மேல், யான் பாடும் நிலைபெற்ற இக் கலம்பகம் ஆகிய நூல் மாலைக்கு, நிறைந்த சிறப்புகள் வாய்ந்த என்றும் உள்ளதாம் முகடுகளைக் கொண்ட மேருமலை என்னும் வெற்று ஏட்டின்மேல் எழுதிய கையில் கொம்புடைய மூத்த பிள்ளையாரே

காவலர்.

(விளக்கவுரை) கலம்பகப் பாமாலை, பல்வேறு மலர் களால் தொடுக்கப் பெற்ற மாலைபோலப், பல்வேறு உறுப்பு களால் தொடுக்கப் பெற்றது 'கலம்பகம்' என்பதைச் சொன் முறையால் விளக்கினார்.

யானைமுகக் கடவுள் வியாசமுனிவர் கூறிய பாரதக் கதையைக், கயமுகாசுரனைக் கொல்வதற்காக ஒடித்துத் தம் கையில் வைத்திருந்த கொம்பை எழுத்தாணியாகவும் மேரு மலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பது "துன்னியசீர்... வாரணம்" என்பதில் அடங்கியுள்ள கதையாகும். இதனை,