பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம்

38

(பொ-ரை) காதளவோடிய விழியையுடைய உமையம் மையை இடப்பாகமாகக் கொண்டவரும், மழுப்படையை வலக்கையில் கொண்டவரும் ஆகிய திருவருணைப் பெருமானின் குளிர்ந்த மலையினிடத்தே, மழை பொழிதலால் உண்டாகிய நீர்த்துளி நனைத்தலால் பால்மடி சுருங்கி, மயிர்க்கூச் செறிந்து, வருந்துகின்ற இளங்கன்றையுடைய பசு, தளிர் மாலையணிந்த ஆயர்கொண்ட குழலின் இசைக்குத் தன் மனத்தை உருக்கிக் கன்றினை நினைந்து இரங்கும் இந்த மாலைப் பொழுது, பொய்ம்மொழி யுரைத்துப் போகிய தலைவருக்கு மிகுந்த இரக்கத்தை உண்டாக்குதல் இல்லையோ?

(வி-ரை) விழி - விழியுடைய உமையம்மையைக் குறித்தது. 'மழையெடுத்த துளி நனைக்க மடிசுருக்கி மயிர்பொடித்து வருந்தும் சேதா" என்பதில் தன்மை நவிற்சியணி அமைந்துள்ளது. தழை தளிர்; தளிர் மாலையணிதல் ஆயர்க்கு இயல்பு. பிழை என்றது முன்னுரைத்த உரை தவறிய பிழை; ஆகலின் பொய்யுரை எனப் பெற்றது. (5)

6. அருணை வித்தகர் மூவரில் ஒருத்தரோ?

எழுசீர்ச் சந்த விருத்தம்

யாதவர் குலத்துநெடு மாதவன்ம ருப்புடைய ஏனமி ருகத்து ருவமாய்

வேதமொழி பெற்றஅயன் ஓதிமம்எ னப்பறவை

வேடமும் எடுத்த திலையோ?

ஓதருணை வித்தகரை மூவரில்ஒ ருத்தரென ஓதியிடும் அற்ப மதியீர்!

சீதமதி வைத்தமுடி பாதமல ரைச்சிறிது தேடுதல்நி னைத்த பரமே.

(பொ-ரை) அடியவர் ஏத்தும் அருணைப் பெருமானை, மூன்று கடவுளருள் ஒருவர் என்று கூறும் குறைந்த அறிவீர், குளிர்மதியணிந்த திருமுடியையும், திருவடித் தாமரையையும் எளிதில் தேடுதல் நினைத்து எதிர்எதிராக, ஆயர்குலத்துப் பிறந்த நெடுமால் கொம்புடைய பன்றி வடிவும், வேதம் ஓதுதலைக் கொண்ட நான்முகன் அன்னப்பறவை வடிவும் எடுத்துத் தேடித் தோல்வியுற்றது இல்லையோ? (ஆகலின் அவன் மூவருள் ஒருவன் அல்லன்; மூவர் தலைவன் என்று கொள்ளுங்கள் என்றவாறு.)