பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

89

அறியின் இதனைத் தொடரேன்; ஆனால் உன்னை ஊன் உண்ண வற்புறுத்த மாட்டோம் உன் விருப்பம் எதுவோ அதுவே செய்க. புலவு சமைக்கும் கலமும் உன்னை அண்டா. நீ விரும்பும் மரக்கறி உணவு எதுவோ அதுவே இனிச் சமைப்போம் என்றார்

மாமன்!

"தாயோ, உன் உணவு வேறு; எம் உணவு வேறா? உன்னினும் பெரிதோ அந்த உணவு! இனி இந்த வீட்டில் இரண்டு உணவு இல்லை! இரண்டு கலங்களும் இல்லை. ஒரே உணவு; மரக்கறி உணவு! தொழிலால் அது நடப்பினும் நடக்க; மாறினும் மாறுக. னி உணவால் சைவம்" என்றார் அன்னையார்.

கட்டிப்பிடித்துக் காதற் பெருக்கெலாம் அத்தாயின் உரையாய்த் தழுவினாள் செல்வி! இதோ! திருக்குறளைத் தம்மறை என்னப் பிறந்த செல்வியின் உணர்வே உணர்வு!

ஒரு சிறு மலரின் நறுமணம் என்ன செய்தது?

ஒரு குடும்பத்தைக் குறள்நெறிக் குடும்பமாக்கிவிட்டது! இச் செல்வி போலும் ஒரு செல்வியை அன்றே வள்ளுவர் கிழவர் கண்டாரோ?

அவள் உருக்கம் கண்டு என்னே என்னே என உரு கி நின்றாரோ?

அதனால்,

"உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன்

புண் அது; உணர்வார்ப் பெறின்”

என்றாரோ?

(257)

உணர்வாரைப் பெற்றால் தானே அது புண்! இல்லையேல் புலால் அன்றோ!

சென்னை - முகப்பேரி மேற்கு குறளாயத் தொடர் வகுப்பு

மாணவி செல்வி. சா பாத்திமா; செய்கை இது.

கற்பித்த ஆசிரியர்: இசை இறை சேரலாதத் துணையர்.

தாய் - தந்தையர் : சாகுல் அமீது - காதர் பீவீ.