பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

93

என் குறையை மறைத்துத் தம் குறையாகச் சொல்லும் அளவுக்கு இவர்க்கு எவ்வளவு பெரிய மனம் என நெகிழ்ந்தாள். தொலைபேசி ஒலித்தது.

அவள் மட்டுமே இருந்தாள்.

எடுத்தாள் அதனை! மருத்துவர் பேசுகிறேன்; உன் கணவரிடம் முடிவு சொல்லி அனுப்பினேனே! சொன்னாரா!

66

"ஆமாம்! அப்படி ஒருவர் எனக்குக் கணவராகக் கிடைக்க நான் பேறு பெற்றிருக்க வேண்டும்."

“என்ன சொன்னார்?"

குறை என்னிடம் தான் என்று தெரிந்தும் என்னைக் காப்பதற்காகத் தமக்குத் தான் குறையென்று அம்மமாவிடம் சொல்லி இருக்கிறார்"

66

"அப்படியா சொன்னார்! அவரிடம்தான் குறையிருப்பதாக நான் சொன்னேன்; அப்படியே இசைத்தட்டைத் திருப்பிப் போட்டு விட்டாரா?"

CC

"ஐயோ! அப்படியா?"

"பரவாயில்லை! நான் எதிர்பார்த்தபடியேதான் எல்லாம் நடந்திருக்கிறது உண்மையிலேயே உன்னிடம் தான் குறை. அதைச் சொன்னால் உன்னைத் தள்ளிவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொள்வாரே! அதனால் அவரிடம்தான் குறை என்று பொய் சொல்லி அனுப்பினேன்" என்றார் மருத்துவர்.

இத்தகு நிகழ்ச்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே எனத் திகைப்புற நின்றாரோ?

இத்தகு பொய்யும் மெய்யோடும் எண்ணத் தக்கதே; இது செய்யும் நலத்தினால் என்பதால்,

“பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்."

என்றாரோ?”

(292)

செய்தி: 'குறை' : கதைமலர் ; தினமலர். (16-6-92)