பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

முதலியன அறுந்து போனதாலும் அங்கு நிகழும் செய்திகளை வெளியிடங்களுக்கு உடனே அறிவித்துத் துணை தேட வழியில்லாமல் போய்விட்டது. சுமார் 70,000 சதுர மைல் பரப்புள்ள நிலப்பகுதி இவ்வாறு பெருஞ்சேதத்துக்கு உள்ளாயிற்று.

நிலம் கீற வானம் பொழிய தீ சூழ நேர்ந்த சேதங்கள் போதா என்பது போல் கடலில் இருந்து ஆழிப்பேரலைகள் கிளம்பி, நிலத்தின் மீது படையெடுத்து வந்து அதை மோதிப் புடைத்து அழித்தன. 'கோரல்' முதலிய சிற்சில இடங்களில் இந்த அலைகள் 30அடி உயரம் வரை ஓங்கி உயர்ந்தன. 'லே பூ' முதலிய வேறு இடங்களில் 10 அடி உயரமும் வேறு சில இடங்களில் சற்றே குறைந்தும் மிகுந்தும் காணப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள 'ஸான்பிரான்சிஸ் நகரிலும் மெக்சிகோவில் உள்ள ஸாண்டியாகோ' துறைமுகத்திலும் சுமார் 5000 மைலுக்கு அப்பால் உள்ள நியூசிலாந்திலும் இந்த ஆழிப் பேரலைகள் மோதின. அங்குள்ள படகுகளைத் தகர்த்தன கடற்கரை ஓரத்தில் இருந்த கட்டடங்கள் பண்டகசாலைகள் முதலியவற்றுக்குப் பெருஞ்சேதம் விளைவித்தன.

சிலி நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள ஜப்பான் தீவுகளின் கீழ்க்கரையிலும் இவை மோதிப் புடைத்தன. அங்குச் சிற்சில இடங்களில் இவற்றின் உயரம் சுமார் 20 அடியாக இருந்தது. இந்த அலைகள் வெறி பிடித்தவை போல் மீண்டும் மீண்டும் பின் வாங்கி முன் வந்து தாக்கிப் புடைத்தன. நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் பிற வகைப்படகுகளும் கட்டறுக்கப்பட்டுக் கடலில் இழுத்துச் செல்லப்பட்டும் கரையில் மோதப்பட்டும் சேதமுற்றன.

டோக்கியோ நகரத்துக்குச் சுமார் 200 மைல் வடகிழக்காக உள்ள சேந்தை என்னும் பட்டினத்தில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆழிப்பேரலைகள் அந்த ஊரைத் தாக்கின. அவற்றின் தாக்குதலுக்குப் பின் கடல்நீரின் வெள்ளத் தையும் இடிந்த கட்டிடங்களையும் அவற்றில் மிதக்கும் பகுதி களையும் தவிர வேறொன்றும் அங்கு உயரப் பறந்த விமானிகள் கண்ணுக்குத் தெரியவில்லை. அந்த ஆழிப்பேரலைகள் சுமார் 20 நிமிடத்துக்கு ஒரு முறையாகப் பலமுறை மோதியதால் ஜப்பான் நாட்டில் கரை ஓரத்தில் உள்ள ஊர்களில் பல, வெள்ள நீரில் மூழ்கிப் பெருஞ்சேதம் அடைந்தன.