பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி

நண்பர் ஒருவர் அவர் நண்பரைத் தேடி வந்தார். வரவேற்பறையில் அமர்ந்தார்.

அவரை முன்னரே அறிந்த வேலைக்காரர் உண்ண அழைத்தார்.

வீட்டுக்குரியவர் ஆய்விலே மூழ்கிக் கிடந்தார்.

அவரொடும் உண்பதற்காகக் காத்திருக் இயலாது! வீட்டு அறிஞர்க்காகப் படைத்து வைத்த உ உணவு மேசை மேல் வைத்து மூடப்பட்டிருந்தது.

வந்த நண்பர் அழைத்ததும் சென்றார்.

இருந்த உணவு தமக்கென எண்ணி உண்ணத் தொடங்கினார்.

வீட்டவர்க்குரிய தட்டெனத் தடுக்க முடியா நிலையில் வேலையாள் திகைத்தார்.

வந்தவர் உண்டு முடித்து மீளவும் விருந்தினர் அறையில் இருந்தார்.

நல்ல பசியால் தூண்டப்பட்ட அறிஞர். ஆய்வகத்திலிருந்து உணவு மேசைக்கு வந்தார்.

நண்பரையும் அழைத்துக் கொண்டு வந்து அமர்ந்தார். தாம் உண்ணும் தட்டு மூடியிருக்கக் கண்டு வழக்கமாய் உள்ள தட்டெனத் திறந்தார்.

வந்தவர் உண்ட கலத்தை எடுத்து மாற்றாமல் வேலையாள் இருந்ததால் நேர்ந்தது இது.

அறிஞரோ உண்கலம் கண்டு பெருகச்சிரித்தார். என்ன என் நினைவு! சாப்பிட்டு விட்டுச் சாப்பிடவில்லை என்று சாப்பிட வந்துள்ளேன் என்றார்.