பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

தகவுடையவராகக் குறை கூறியவர் இருப்பின் சீரிய ஆய்வு நடத்தியே தீர வேண்டும்; இப்பொழுது கிளப்பி உள்ள குற்றச் சாற்று பொறுப்பற்ற ஓர் இதழினது. ஆதலால் இதனைத் தள்ளுபடி செய்தலே தக்கது என்று முளவும் தலைமை அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கும் அசைந்தார் அல்லர் உக்கும் சிங்

தம்மிடம் அவை வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். குறை கூறப்பட்ட செய்தி தொடர்பான எல்லா ஆவணங்களையும் அவையில் வைப்பது பற்றிய தம் கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்.

சரி! பின்னே என்ன ஆனது?

அவர் சொல்லிய ஆவணங்களோடு அவைக்கு வந்தார். ஆளும் கட்சியர் முன்னர் ஆவணங்களை வைப்பதினும் எதிர்க்கட்சியர் முன்னர் வைப்பதே சால்பு எனக் கொண்டு அவ்வாறே வைத்தார்!

எதிர்க்கட்சி உறுப்பினர் என்ன செய்தனர்? என்னென்னவோ பேசினர்.

ஆவணங்களைத் தொட்டுப் பார்க்கவே இல்லை!

உக்கும் சிங்கின் மெய்ப்பாட்டின் மேம்பாட்டைப் பாராட்டுவதா? அம்மெய்ப்பாட்டில் ஆளுங்கட்சியொடு, எதிர்க்கட்சியினரும் ஒருங்கே கொண்டிருந்த நம்பிக்கையைப் பாராட்டுவதா? இத்தகும் நிகழ்வுகள் ஒன்றோ பலவோ வள்ளுவர் கிழவர் கண்டாரோ?

அவற்றை எண்ணி எண்ணி நின்றாரோ?

அதனால்,

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்'

என்றாரோ?

"

(510)

செய்திகள்: 22-9-64; 3-10-64