பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஒற்றும் உரை சான்ற நூலும்

மனைவி மேல் கசப்பு

கொன்றே போட்டார்.

கொன்றதை மறைக்க வேண்டுமே!

மரத்தைக் கூழாக்கும் பொறியிலே மரத்தொடு மரமாய்க் கூழாய் ஆக்கினார்.

கூழைப் பரந்த வெளியில் தெளித்தார்.

வேலை முடிந்ததாய் வீடு சென்றார்.

மனைவியாய் இருந்தவள் வான ஊர்தியில் பணிப்பெண். அவளுக்கொரு தோழி.

அவளிடம் சொல்லியிருந்தாள்: "என் கணவன் என்னைக் கொன்று போடுவான்"

வான ஊர்தித் தோழியைக் காணாத் தோழிக்குக், கணவனைளப் பற்றி அவள் சொன்னது நினைவில் வந்தது. துப்புத் துறைக்குச் செய்தி தந்தாள்.

ஆய்வு தொடர்ந்தது.

பனிப்புயல் நாளில் மரக்கூழ்ப் பொறியை ஒருவர் தள்ளிச் சென்றதைப் பனியை அகற்றும் ஒருவன் கண்டதாகக் கூறினான்.

ஏரியொன்றில் மரக்கூழ்ப் பொறி மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.

விரலம் விரலமாக ஒரு நூறு பேர்கள் தேடினர்.

தசையொடு கலந்த மரத்துகள்கள் சிக்கின.

சிக்கிய துண்டுகள் 56.

ஒரு பல், கட்டை விரல் நுனி, சில எலும்புகள், தலைமுடி ஆகியவும் சிக்கின.