பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

ஒரு மருத்துவமனை.

அதன் முற்றத்தில் அருமையாகக் கவிந்து நின்ற நிழல் மரம். கையெட்டும் அளவில் தாழ்ந்த கிளைகள்! தளிர் இலைகள்! வெயிலைத் தான் தாங்கிக் கொண்டு, தண்ணிழல் வழங்கும் வேம்பு.

காலமோ பங்குனி கடந்து சித்திரை பிறந்த மறுநாள்

ஒரு சிறுமி எக்கி நின்றாள். ஒரு கிளையைப் பற்றித் தழையை ஒடித்தாள்.

அவளோடு வண்டியில் வந்திறங்கிய குழந்தைகள் அறுவர் எழுவர். உடன் வந்த, பெரியவர்கள் எல்லாம் மருத்துவ மனைக்குள். இவர்கள் ஆட்டம் இங்கே!

ஒவ்வொரு குழந்தை கையிலும் வேப்பங்குழை!

இரண்டு இரண்டு கைகளிலும் வேப்பங்குழை! ஒரு பெரியவர் கண்டார்.

முதற்கண் ஒடித்து வழிகாட்டிய சிறுமியை அழைத்தார். நீ ஒடித்தாய் பார் எத்தனை பேர்கள் எவ்வளவு கிளைகளை ஒடித்துளர்?

எவ்வளவு அருமையாக ஆடிக்கொண்டிருந்தது! வாடச் செய்து விட்டாயே நீ!

எத்தனை பேர்க்கு நிழல் தந்தது இது!

அறிவிலா அது தரும் நிழலை அறிவுப் பிறப்பு கெடுக்கலாமா? என்றார்.

அறிவறிந்த செல்வி தலைநாணினாள்!

அவற்றை உணர்ந்த தகவு அது!

இது பெரும் குற்றம் இல்லை.

விளையாட்டாகச் செய்தாய்!

வினையாக முடிந்தது.

தப்புக்கு வழி காட்டாதே! தப்புக்கு வழி காட்டின் தொடர் தப்பைத் தோற்றுவித்த குற்றம் நம்மதே என்பதை உணர்ந்தால் போதும்!