பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல் இ

115

தப்பு நடப்பதைக் காணும் போது இயன்ற அளவு தடுக்க முற்படுகிறாயா? அது உலக நலத் தொண்டு என்றார்.

அடுத்த நாள் மருத்துவமனைக்கு வந்த அந்தச் சிறுமி, வேப்பங்கன்று ஒன்றைக் கொண்டு வந்து ஊன்றினாள்!

திருந்திய மனம் வருந்திய பரிசு இவ்வேம்பு!

எவ்வளவு இனிப்பான நிகழ்ச்சி!

இத்தகு நிகழ்ச்சிகள் போலும் நிகழ்ச்சிகள் நிகழக் கண்டு கண்டு களித்தாரோ வள்ளுவக் கிழவர்.

என்னே அருமை! என்னே அருமை! என்று வியந்து நின்றாரோ? அதனால்,

66

“விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்"

என்றாரோ?

(648)

சொல்லலில் செய்தல் உயர்ந்தது தானே!