பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம்-39

அமெரிக்க நாட்டு சாண்டா கிளாரா என்னும் இடத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாம் இது. (தினமணி சூலை. 22-1992)

இத்தகு அறிவிலா மூடம் ஒன்றைக்கூட வள்ளுவர் கிழவர் கண்டாரோ?

மூடமே வடிவாம் மூடன் கேட்டுக்கு முடிவில்லை என்று நொந்துபோய் நின்றாரோ?

அதனால்,

"ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு" (835)

என்றாரோ?

(அறியாமையாகிய ஒன்றற்கே ஆட்பட்டுச் செயல்புரியும் அறிவிலி, பின்வரும் எக்காலமும் துன்பம் என்னும் புதைசேற்றுள் புகுந்து அழுந்துவான்.)