பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ஈன்றாள் முகத்தேயும்

குத்துச்சண்டையில் புகழ் வாய்ந்தவர். பரிசு பாராட்டுப் பல பெற்றவர்.

உலக அளவில் போட்டியிட வல்லவர்.

ஆனால் போதைக்கு அடிமையர்.

வீர மகனைக் கண்டு விம்மித முறவில்லை அவரைப் பெற்ற அன்னை!

"போதைப் பேய்க்கு அடிமைப்பட்டானே இப்பேதை! இதில் இருந்து அவனுக்கு விடுதலை உண்டா"?

என்று வெதும்பினார்.

அன்னை உரையை - உணர்வை -மதியா அம்மகனுக்கு ஒரு நாள் வந்தது.

போதை மருந்து வைத்திருந்தார் என்னும் குற்றச்சாட்டுக் கிளர்ந்தது! காவல் துறையினர் ஆய்ந்தனர். அஃது இருந்த தடமும் இல்லை! இடமும் இல்லை!

ஆனால் போதை மருந்து இருப்பதைத் திறமாய் மறைத்துளார் என்பது தெரிந்தது; மேலும் முயன்றனர்.

காலுறைக்குள்ளே போதைப் பொடியைத் தாளில் மடித்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர்.

குற்றம் சாற்றிச் சிறையும் செய்தனர்.

26 வயதே ஆன அந்தக் குத்துச்சண்டை வீரர் பெர்ட்டு

கூப்பர் என்பார்.

அமெரிக்க நாட்டினர்.

சிறைப்பட்ட மகனைக்கண்டு அன்னை வருந்தினார்

அல்லர்.

சிறைப்படுத்திய காவலர்க்கு நன்றியுரைத்தார்.