பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க வையகம் தழுவிய வாழ்வியல்

133

தொண்டில் திளைக்கத் தோன்றும் துணையாய் துலங்கும் பொருளாய்த் திகழ்பவர் முதுபெருந் தொண்டர் செல்வநாயகர்.

இவர்களை நினைக்கிறேன்; இவர்களே என்னுள் இருந்து ஊக்கி வருபவர் என்கிறார்.

அற்றார்க்குதவும் இத்தகைக் கொடைஞர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே பெருந்தகை! என்னே பெருந்தகை!

என்று வியந்து நின்றாரோ?

அவ்வாறு உதவார் தம்மை

66

"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று”

என்றாரோ?

(1007)