பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

டு இல்லார்.

வாழ்வில் விடிவும் இல்லார்.

தெருவில் கிடக்கும் குப்பைத் தாள்களைப், பொறுக்கி விற்று வயிறு வளர்க்கும் ஏழ்மைப் பிறவியர்!

"இங்கே வருக; ஏராளம் தாள் குவியல்" என்ற அழைப்பு! இனிய தேனாய் இருக்க உள்ளே ஓடினர்!

எளிய டமா? உயர்ந்த கலைகளின் ஒரு மொத்த விளக்கமாக உயர்ந்து நிற்கும் பல்கலைக் கழகம்!

அழைத்தவர் தாமும் தெருப்போக்கியரா?

பல்கலைக் கழகக் காவல் கடமையர்!

உள்ளே போனவர், குப்பைக்குவியலில் குனிந்து பொறுக்கத் தலைப்பட்ட அளவில், தலையிலே பேரடி! ஒன்றா இரண்டா? ஒருவரா இருவரா? அடிதாளாமல் அடியற்ற மரமாய்ச் 'செத்தேன்' என விழுந்தான் ஒருவன்!

'செத்தான்' என்று போயினர், மற்றவர் தம்மைச் சாக

அடிக்க!

செத்தவனாக வீழ்ந்தவன், சிறிது பொழுதில் மயக்கம் நீங்கி எழுந்தான்; மறைந்தான்; ஓடினான்.

காவல்துறையைக் கடிதில் அடைந்து, நடந்த கதையை நடுக்கொடும் உரைத்தான்!

மருத்துவக் கல்வி கற்பார் தமக்குக், காட்டும் பொருளாய்ச் செத்தார் தம்மை விலைக்கு வாங்குதல் வழககம்!

செத்த பிணத்தால் சேரும் பணமெனக் கண்டபின், சாகவைத்துப் பிணமாய்த் தந்து, பணமாய்ப் பெற்ற, சாவும் பிணங்களின் கதையாம் இதுவே!