பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

143

ஏழை எளியவர் பசியர் பிணியர் தம்மை, ஆவலூட்டி அழைகக! அடித்துக் கொன்று, பிணத்தைத் தந்து, பணத்தைப் பெற்றிட! இதுவே வாடிக்கையாம்!

இருபத்திரண்டு பிணங்கள் இப்படி வந்தனவாம்!

குழந்தையும் உண்டாம்! பெண்டும் உண்டாம்! கொலம்பியா நாட்டுத் தலைநகரான பொகோடோவில் நிகழ்ந்தது இது!

-

நிகழ்ந்த இடமோ, பல்கலைக்கழக வளாகம் பாரன் குவில்லாபிரி பல்கலைக்கழகப் பெயரதாம்!

காவல்காரன் கயமை மட்டுமா ஈது? பல்கலைக் கழகுத் தலைமைக்குமே தெரியுமாம்;

உயிர் காக்கும் மருத்துவ ஆய்வை இப்படிப் பெற்றவர், பின்னே எப்படி இருப்பார்?

தேடி வந்த ஏழை நோயரை எல்லாம், உறுப்புறுப்பாக அறுத்தறுத்தெடுத்துச் செல்வர்க்குப் பொருத்திச், சேர்க்க

மாட்டாரா செல்வம்?

சீ! சீ!

இப்படிக் காட்சியும் உலகில் நிகழும் என்று எண்ணி எண்ணி வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே கொடுமை என்னே கொடுமை என்று நொந்து நின்றாரோ?

அதனால்,

“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள

என்றாரோ?

(241)

செய்தி: தினமணி. 4-3-92.