பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலில் கட்டி

ஆறாத் தொல்லை.

4.

அறுவை மருத்துவம் செய்யப்பட்டது.

ஊன்றுகோல் உதவியால் நடக்கத் தொடங்கினார்.

மாடியில் இருந்து தவறி விழுந்து இடக்கை எலும்பு

ஒடிந்தது.

மூன்று வாரங்கள் கிடக்கையில் கழிந்தன.

ஒடிவு தேறி, ஒருவழியாகக் கை கூடிற்று. ஓடின சில வாரங்கள்.

மீண்டும் வீழ்ந்து கணைக்கால் எலும்பு ஒடிந்து போனது. மரக்கறி உணவே கொள்ளும் அவரை மருத்துவர் கூடிப் பழித்தனர்.

உயிரியைத் தின்று உயிர் வாழ்வதைவிட உயிரையே விடுவேன் என்றார் அவர்.

"மரக்கறி உண்பார் நெடிது வாழார்" என்றனர் மருத்துவர். "புலாலுண்பாரில் என் அகவை உள்ளாரை அழைத்து வருக" என்றார் அவர்.

ஒரு நண்பர்க்கு எழுதினார் அஞ்சல்;

என்னை ஒரு நாள் அடக்கம் செய்யக் கொண்டு போதல் உண்டேயன்றோ!

அற்றை நாளில் அழகு வண்டிகள் எவையும் தொடர்ந்து வருதல் வேண்டா.

ஆடும் மாடும் பன்றியும் கோழியும் மந்தை மந்தையாய் வரட்டும். துள்ளித் திரியும் மீன்காட்சிச் சாலை ஒன்றும் தொடர்ந்து வரட்டும்.