பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

145

இந்த உயிரிகள் எல்லாம் கறுப்புடை அணியாமல் வெள்ளுடை அணிந்து விரும்பி வரட்டும்.

“எங்களைக் கொன்று தின்று, இன்னுயிர் வாழ்வதைக் காட்டிலும் என்னுயிர் இழக்கவும் துணிவேன் என்று வாழ்ந்தவன் இந்த மாந்தன்" என்று பாராட்டிக் கொண்டு வரட்டும் என்று எழுதினார்.

"மாந்தனைக் கொல்லும் கொலையைப் போன்றதே வேட்டைக் கொலையும்" என்றார்.

"இன்னும் சொன்னால் வளர்ந்தவன் ஒருவனைக் கொல்வதைக் காட்டிலும் குழந்தையைக் கொல்லல் கொடுமையே அல்லவோ! அக் கொலை போல்வதே வேட்டைக் கொலை' என்றும் கூறினார்.

தமிழக மண்ணில் பிறந்தவர் அல்லர்!

15

உலகப் பரப்பின் ஒரு பெரும் பகுதியைத் தனக்குள் கொண்டு ஆட்சி நடத்திய இங்கிலாந்து மண்ணில் தோன்றியவர். தொண்ணூறுக்கு மேலும் வாழ்ந்தவர்.

அறிஞர் பெர்னாட்சா அவர்.

இத்தகு தெய்வ அருள்நெறிச் செல்வர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

அதனால்,

"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா

உயிரும்கை கூப்பித் தொழும்"

என்றாரோ?