பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

149

அந்தப் பணிவுச் செல்வன் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்துக் கொண்டிருந்தும் அன்பு வழிக்கே அன்றி அயல் வழிக்குப் பயன் படுத்தா அண்ணல் ஆபிரகாம்!

அமெரிக்க நாட்டுத் தலைவன்!

இத்தகு காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

அதனால்,

"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து"

என்றாரோ?

(978)