பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

என்ற அளவில் இருந்தனள் இல்லை!

காற்கை தூக்கிக் கனிந்த நகையால்

கவின்மிகு வணக்கம் செய்தாள்!

இப்படி ஒருத்தியை வள்ளுவர்கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ!

அதனால்,

“ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள்”

என்றாரோ?

(662)

திருப்பரங்குன்றத்தில் கண்ணேரில் கண்ட காட்சி இது.

161