பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.

ஆடற் கலைக்கே அருங்கொடையாக வாய்த்தவள்

இவள்' என அரங்கேற்றம் ஆயது.

பரிசுகள் குவிந்தன; பாராட்டுகள் நிறைந்தன.

பம்பாயில் இருந்து சென்னைக்கு வந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி, வயலூர் எய்தினர்.

வயலூர் முருகன் அவர்கள் வழிபடு தெய்வமாம்! வழிபாடு முடித்துச் சமயபுரம் சார்ந்து வடக்கே சாலையில் ஓடியது வண்டி!

எதிரே வந்த வண்டி தூக்கி எறிந்தது.

விழுந்தாள் ஆடல் செல்வி, முட்டி மோதி!

எழுந்தாள் அல்லள், காலோ ஒடிவு!

திருச்சி சென்றனர் மருத்துவம் புரிய.

முதலுதவி முடித்துச் சென்னை 'விசயா' சேர்ந்தனர்.

என்ன ஆயினும் என்ன?

முட்டிற்குக் கீழே காலை எடுத்தே முடிந்தது!

செயற்கைக் காலுக்குச் செயப்பூர் சென்றனர்.

பொருத்தலும் பொருந்தலும் இயல்பாகிட வேண்டுமே!

பிள்ளை தாங்கினாள்!

பெற்றோர் ஏங்கினர்!

"பரிவு காட்டிப் பாழ்படுத்தாதீர்” என்றார் மருத்துவர்.

காலும் கூடியது; முழுதாய் நடந்தாள்.

நடக்கப் பிறந்த பிறப்பா என் பிறப்பு?

ஆடப்பிறந்த பிறப்பு அடங்கிப் போக ஆகவே ஆகாது!