பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம்

39

எண்ணிலாப் பாடல்கள் எண்ணக் களஞ்சியம் ஏறின. பாட்டும் பொருளும் பயில விளங்கின.

தமிழ்நாடு இந்திய நாடெனும் எல்லை தாண்டி

சிங்கை மலேசியா நாடும் அறிய - அவையோர் வியக்க அறுபது நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன.

உருவும் அகவையும் - உரையும் பாட்டும் வினாவும் விடையும்.

கண்டோர் கேட்டோர் தமக்குக் கழிபேருகை யாயின! இத்தனை நினைவா இந்த அகவையில்!

பெறலரும் நினைவின் பேறுறு குழந்தையைப்

பெற்றவர் பெற்ற பேறோ பெரிது!

செல்வச்சிறுமி ஆதிரை.

அருமைத் தந்தை கண்ணப்பர்.

அன்பின் அன்னை அபர்ணா.

இருப்பிடம் சென்னை.

இத்தகு நினைவுச் செல்வியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து"

என்றாரோ?

தினமலர்: ஞாயிறு மலர் 8-12-91.