பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

"கீழே விழாமல் என்ன செய்யும்? கிறுக்குத்தனமிது" என்று தோன்றலாம்!

அவனோ எண்ணினான்! ஆழமாய் எண்ணினான்.

புவியின் ஈர்ப்பால், பொருட்கள் மேலேயிருந்து கீழே வீழ்கின்றன என்று கண்டான்.

கண்டதை மேலும் மேலும் ஆய்ந்தான். புவியீர்ப்பாற்றலை உலகம் அறியச் செய்தான்.

புவி தோன்றிய நாள் தொட்டே இருக்கும் ஆற்றல் எனினும் புலப்படக் காட்டிக் கொள்கையாய்த் தந்தவன் அவனே!

அதன் பயன் என்ன செய்தது?

ஈர்ப்பின் ஆற்றல் கடந்த எல்லையும் உண்டு.

எல்லை கடந்து போனபொருள மற்றோர் அண்டத்து ஈர்ப்பினால் அதனை அடையும்.

ஈர்ப்பின் எல்லை கடக்க ஏவின், ஏவுதல் இன்றியே இழுத்துக் கொள்ளும் அண்டம் உண்டு.

அண்டமும் அண்டமும் மோதா நிலையில்,

கோளும் கோளும் முட்டா நிலையில் இருப்பதெல்லாம்

ஈர்ப்பின் ஆற்றல் கொடையே!

என்பதை யெல்லாம் உலகம் காணச் செய்தான்!

உருவச் சிறுமை என்ன ஆனது?

ஒள்ளிய அறிவுப் பெருமை என்ன ஆனது?

வியத்தகும் இந்த ஒள்ளிய ஒல்லியன் ஐசக்நியூட்டன்! இத்தகும் ஒருவனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே உருவம்? என்னே அறிவு!

என்றே வியந்து நின்றாரோ?

“உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து”

என்றாரோ?

(667)