பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.

செயல்படவில்லை தந்தையின் சிறுநீரகம்;

"நீரை மாற்றும் மாற்றில், நீடித்தல் இயலாது; மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினால் அன்றிப் பிழைத்தற் கியலாது என்றார் மருத்துவர்.

"நான் தருவேன் பொருந்தும் என்றால்" என்றான் மைந்தன். "நானே தருவேன் பொருந்தும் என்றால்" என்றாள் நன்மகள்.

"நானும் தரவா மாட்டேன் பொருந்தும் என்றால்- என்றாள் வந்த மருமகள்.

தாயார் மட்டும் ஒன்றும் சொல்லா திருந்தாள். "தாயார் என்ன கவலையற்றுள்ளார்"

என்றே மூவரும் எண்ணினர்.

"மருத்துவமனையில் அப்பா உழலுதல்

அறிந்துமேன் அசையாதுள்ளார்!

கல்லா இரும்பா இவர் மனம்

என்றே தமக்குள் எண்ணினர்.

மகனும் மகளும் மருகியும் மருத்துவ ஆய்வில் புகுந்தனர்.

எவர்தம் சிறுநீரகமும் பொருந்திய தில்லை!

என்ன செய்வர்?

அன்னையை எண்ணினர்!

அவரோ வாயைத் திறந்திலர்.

"நடப்பது போல நடக்கட்டும்; நானென்ன சொல்வேன்?'

என்றார் அன்னை!