பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

மூன்றாம் தொகுதி மும்முரமாக வேலை நடந்தது.

அச்சும் நடந்தது.

முடியுமுன்னே முடிந்து போனார்!

உதவிய அரசு ஒதுங்கிக் கொள்ளுமா!

அச்சிட்ட

படிவமெல்லாம் மாவட்ட ஆட்சியர்

அலுவலகத்தில் கள்ளிப்பெட்டியில் அடங்கி ஓர் அறையில் கிடந்தன.

அரசு மறந்தது; ஆரும் நினைத்திலர்;

நினைக்க ஒருவர் வாய்த்தார்; முயன்றார்; கண்டார்; கண்ணீர் வழியக் கரைந்தார். அந்தோ!

தூசு தும்பு,ஒட்டடை பாச்சை பூச்சி அப்பிக்கிடந்தன! அரித்தும் அழிந்தும் போனவை மிகப்பல.

எஞ்சிய பகுதி 'திருமுறை கண்ட காட்சி போல்' தெரிந்தது.

தட்டிக் கொட்டி எடுத்துப்பார்த்திட, மூன்று தொகுதிகள் 2174 பக்கம் ; சில நூல்கள் கிட்டின!

);

அகராதி மணக்கச் சந்தனக் கட்டையாய்த் தம்மை அரைத்துக் கொண்டவர் தி.வி. சாம்பசிவனார்

அவரூர் அறியச் சான்றெதும் இல்லை!

ஆனால் தி.வி. அண்ணாமலை என்பார் சான்றிதழ் ஒன்று ஆங்குக் கிடைத்தது.

'தி.வி' ஒன்று படல் உரிமை சொன்னது.

தஞ்சை, அம்மாப்பேட்டை அவரூர் எனக் காட்டி நின்றது சான்றிதழ்!

திருமுறை கண்ட சோழன் போலத் தேடிக்கண்ட திருவினர் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ. சுப்பையா! அவர் தம் தேடல்தானே,

சாம்பசிவனார் ஒப்புரவாண்மை தமிழுலகு அறியத்

தந்தது!

சாம்பசிவனார் போல, வாழ்வுத்துணையாய் இருந்த