பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

187

விடாப்பிடியாகத் தரவேண்டியதில்லை என்று தாம் மறுத்ததையும், அவர் அதனை ஏற்று மதித்துப் போற்றிய உயர்வையும் நினைத்தார் சினத்தர்.

கடனை உடனே அனுப்பி, நிகழ்ந்ததற்கு இரங்கி எழுதினார். வணிக வாடிக்கை அன்பு நண்பாய்ச் சிறந்தது.

தமக்குப் பிறந்த குழந்தைக்குக் கடையின் உரிமையாளர் பெயரைச் சூட்டிப் பெரிது போற்றினார்.

வாணாள் அளவும் வாடிக்கை விடாத தொடர்பினர்

ஆனார்.

கடையின் உரிமையர் கடுத்தோ கடித்தோ மறுத்தோ மாற்றியோ பேசியிருப்பின் ‘எதிர் எதிர்' நின்றார் இணைவுறும் நன்மை எய்தி இருக்குமோ?

கடையின் உரிமையர் டெட்மார்.

கடனை மறுத்தவர் அவர் தாம் வாடிக்கையாளரானாரே! அவர் பெயரை உரிமையாளர் உலகறியச் சொல்லுதல் ஆவரோ?

இத்தகு சீறாச் சீர்த்தியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

அதனால்,

“உள்ளிய வெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்’

என்றாரோ?

(309)

வாழ்க்கையில் வெற்றி : பக் 165-166.