பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

197

தக்கார் இவரெனத் தேர்ந்தவர் நம்பிக்கையை ஒழித்தார். இவர்தம் வேலையை உறுதிப்படுத்தலாம் என்றவர் எழுத்தை ஒழித்தார்.

சட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை உருவாக்கி நாட்டு வருவாயை ஒழித்தார்.

அறத்தையும் ஆக்கத்தையும் ஒழுங்கே யழித்தார்.

பிடிபட்ட பின்னே, மானம் மதிப்பு மனைவி மக்கள் என்னும் எல்லாவற்றையும் அழித்தாரா இல்லையா இவ் வழிவாளர்.

இத்தகும் அழிகேடர் செயலை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

இப்படிக் கீழ்மையில் இறங்கினரே என்னே என்னே என்று வருந்தி நின்றாரோ?

அதனால்,

“கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும்"

என்றாரோ?

(658)