பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

கணியன் ஒருவனைக் கருதிச் சென்றான்.

"தொட்டது துலங்காது;

எடுத்தது விளங்காது;

201

ஏழரை யாண்டுச் சனி;

ளைய பிள்ளை பிறந்தான்;

த்தனை யாயது;

என்று சாவானோ, அன்றே உனக்கு விடிவு;

என்றான் கணியன்

வேளைபார்த்தான் வேதனைக்காரன்.

தாயும் மூத்த பிள்ளையும் இல்லா வேளை. இளைய சேயின் கழுத்தை முறித்தான்.

செத்தது குழந்தை.

தந்தைதான் கொன்றான்" என்பதற்குச் சான்று தாயும் மூத்த சேயும்.

நிகழ்ந்த உண்மையை நிகழ்ந்தவாறே கூறினான் தந்தை. செய்த குற்றவாளி வாணாள் தண்டனை பெற்றான் செய்யத் தூண்டிய குற்றவாளி என்ன ஆனான்?

அவனுக்கென்ன, இன்னோர் மூடன் முழுவடிவாகப் புழுவாகத் துடித்து வருவான்!

பொய்மூட்டையை அவிழ்த்து விடுவான்! பொழுதும் போகும்! பொருளும் ஆகும்!

கண்மூடித் தனத்தை வளர்க்கும் கயவன் குற்றக் கூண்டில் ஏற்றப்படா வரைக்கும், குற்றம் எப்படிக் குறையும்?

கற்றவர் என்பார் பெருக்கும் கண்மூடித்தனத்துக்குக் கணக்கு வழக்குண்டா?

அதற்குள்ள வரவேற்பென்ன? வாழ்த்தும் என்ன?

கண்மூடித்தனத்தை வளர்க்கும் கயவன் உரையை மெய்யாய்க் கொண்டு கயமை புரிந்த இன்னவன் போலும் ஒருவனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?