பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

213

எவனொருவன் வாழ்வானோ அவன் கிழபேரிரையான். அவனுக்கு நோய் அகலவே அகலாது என்கிறார் (946). ஏழு பாடல்களில் இவற்றைக் கூறுகிறார். இவற்றுள்ளும் ஐந்து பாடல்களில் அற்றது (செரிமானம்) அறிந்து உண்ணுதலையே வலியுறுத்துகிறார். ஏன்?

நோய்களுக்கெல்லாம் மூலம் மலச்சிக்கலே என்னும் இற்றை அறிவியல் அறிஞர் கூற்றை எண்ணுதல் வேண்டும்.. எல்லாக் குற்றங்களுக்கும் அடிப்படை பொய்யே எனக் கண்ட காந்தியடிகளார், அதனை மலச்சிக்கலுக்கு ஒப்பிட்டுக் கூறியதையும் எண்ணுதல் வேண்டும். எண்ணின் வள் ளுவ வாழிவியல் சிறப்பு வெளிப்படும்.

உடல் ஒரு கூடுதான்; அஃது உயிரின் வீடுதான். இவ்வுயிரின் வீட்டுக்கு, யாக்கை காயம் குரம்பை சதுரம் மெய்மேனி புற்கலம் முதலான பெயர்களும் உண்டுதான். இவற்றினும் மேலாக 'உயிர் நிலை' என்றோர் பெயரை வள்ளுவர் வழங்குகிறாரே (80,255, 290). உயிர்நிலை என்பதன் அருமையை உணராமல் உண்ணும் உணவாலேயே கேடு புரியலாமா?

-

பலருக்கும் பயன்பாடாக உதவியாக -காப்பாக இருக்கும் இவ்வுடலைப் போற்றிக் கொள்ளாமையால், பிறருக்குச் சுமையாக - துயரமாக எரிவாக ஆக்கி விடலாமா? ஆதலால், நோயின்றி வாழ்வதற்குரிய நோன்புகள் (கடைப்பிடிகள்) எவ்வெவையோ அவற்றையெல்லாம் சிக்கெனப் பற்றிக்கொண்டு சீரான வாழ்வு வாழ்தல் தனக்கும், குடும்பத்துக்கும் உலகுக்கும் ஆக்கமாம்.

உடற்குறை

"நாங்களும் மாந்தப் பிறப்பாகத்தானே பிறந்தோம்; உடற் குறையராகப் பிறக்க வேண்டும் என்பது எங்கள் பெற்றோர் விருப்பமா, எங்கள் விருப்பம் இல்லையே! "நீங்கள் முந்தைய பிறப்பில் செய்தவினையே இக்குறைப் பிறப்பாக்கியிருக்கிறது” என்றும், "பெற்றவர் செய்த பாவம் இப்பிள்ளையாய்ப் பிறந்துளது என்றும் ஏசுகின்றனரே! 'என் செய்வேம்' என்று ஏங்குவார் உளர்! அருளற்றோரும் உணர்வற்றோரும் இவ்வாறு பழிப்பதைத் தாங்கமாட்டாத உடற்குறையர் நொந்து நொந்து போதல் கண்கூடு. தம் கண் ஒளி இழந்த போழ்தில் தம் குடும்பத்தவரே "போ குருடா" என்று பழித்ததை இறையிடம் மன்றாடிக் கேட்டல் சுந்தரர் தேவாரம் கண்டதெனின், பிறர் உடற்குறை