பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம் -39

"தேவையைக் பெருக்கிக் கொண்டு அது இல்லை இது இல்லை என ல்லாமைக்கு வருந்துகிறாய். ஆனால் எனக்கு இது கட்டாயம் வேண்டியது இல்லை; இது தேவையே இல்லை என்று ஒவ்வொன்றாக விலக்கிப்பார் அவற்றால் உனக்குத் துன்பம் உண்டாகாது; வேண்டியவற்றுக்கும் வேண்டிய அளவு வாய்ப்புக் கிட்டும் என்கிறார். அது.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்'

என்பது.

நிறைவு

(341)

இவ்வாறு தனி வாழ்வில் ஏற்படும் பலப்பல சிக்கல் களுக்கும் அருமருந்தனைய தீர்வுகளை வழங்கிச் செல்கிறார் வள்ளுவர்.சுட்டிக் காட்டியவை சிலவே. காட்ட வேண்டிய வையோ பலவாகலாம்! நோக்குவார் நோக்குக்கெல்லாம் இடந்தந்து ஆக்கமாம் வகையில் உதவுவது வள்ளுவம் என்பது இக் குறிப்புகளால் புலப்படும்.