பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்”

(504)

241

என்பதனை ஆய்வுக்கும் நடுவுநிலை முறைமைக்கும் நட்புக்கும் கொள்ளல் தகும். குடிநலம் காக்க வேண்டுவார் குணம்நாடி அதனை ஊக்கி அவ்வழியைப் பற்றிக் கொள்ளலும், குற்றத்தை நாடி அதனை களைந்து பரிவோடு அணைத்துக் கொண்டு குண வழியில் சிறக்கப் படிப்படியே வழி செய்தலும் வேண்டும். இவ்வகையில் சோர்வோ வெறுப்போ கொள்ளல் ஆகாது; பிறரிடத்துப் பார்க்க வேண்டிய மானத்தைக் கூடக் குடிநலம் கருதுவோர் தம் குடியளவில் கருதுதலும் ஆகாது.

குடும்பத்து உண்டாகும் குறையை, உழவடை நிலத்தில் உண்டாகும் முட்செடியை உழவன் முளையிலேயே கிள்ளி எறிவது போலக் கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாக்கால் மண்வெட்டி, கம்பி, கோடரி,வாள் எனப் பலப்பல கருவிகளைக் கொண்டு கை நோவப் பணி செய்து அகற்ற வேண்டிவரும். அகற்றினும் அதன் படர்ந்து சென்ற வேரை அகழ்ந்து சென்று அகற்றுதலும் வேண்டும். வெட்டாமல் விட்டு வைப்பின் அதன் நிழற்பரப்பும் வேர்ப்பரப்பும் கூடிய நிலப்பரப்பும் பயன் தராததாய்க் கெடும். இதனை,

CC

'இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து”

என்பார் திருவள்ளுவர். முள் மரம் கொல்லல் என்பது தீய பண்புகளை அழித்தல் தீமையை அழித்தல் என்பது, தீயவரை அழித்தல் ஆகாமை அடிப்படை அறம்.

மடியும் மானமும்

குடிநலம் பேணுவார் மடி என்னும் சோம்பலுக்கு அடிமை ஆதல் ஆகாது என்பது

"குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்”

என்பதால் விளங்கும்.

(601)

"குடியென்று சொல்லப்படும் அணையாத ஒளி விளக்கு சோம்பல் என்று சொல்லப்படும் திரிக்கருக்கு உண்டாகிப் பரவுதலால் அழிந்து விடும்" என்கிறார்.