பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

243

செல்வரும் நயன் உணர்ந்தாரும் கை கொடுத்து உதவுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்பராம்.

மடிதற்று முந்துறும் என்பது தொங்கக் கட்டிய உடையை (தாரை) மடித்துக் கட்டிக் கொண்டு ஓடி வந்து முன் நிற்பர் என்பதுடன், மடியென்னும் சோம்பல் அற்று முன் வந்து நிற்பர் என்பதுமாம். குடும்பத் மடியாமல் காக்க மடியின்றி முயல் வானுக்கு உதவ மேலோர் தாமும் மடியின்றி முந்து நின்று காக்க வருவர் என்னும் நயமும் நயனும் எண்ணத்தக்கன.

அமரகமும் தமரகமும்

ஒரு கூட்டுக் குடும்பத்தில் பலதலைக் கட்டுகள் இருப்பினும் குடும்பப் பொறுப்பை அனைவரும் தாங்குவார் அல்லர், கட்டற்ற இயல்பில் காலம் தள்ளுவாரும் அல்லர். உணவிலும் உறைவிலும் உழைப்பிலும் அவரவர் நிலைக்குத் தகத் தனிநலம் போற்றப் படினும், பொதுக் குடும்ப நலம் ஒரு தலைமைக்குக் கட்டுப் பட்டே ஆதல் வேண்டும். அத்தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர் வழியில் நிற்றல்தான் குடியோம்புவார் கடமை? இல்லாக்கால்

என்னாம்?

படைவீரர் பலர்க்கு ஒரு தலைமை இருத்தல் போன்றது. குடும்பத் தலைமையாக ஒருவர் இருப்பது, நிலைக்குத் தகவும் நெருக்கடிக்குத் தகவும் படைத் தலைமை எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக் கொண்டு படைவீரர் செயலாற்றுதல் அவர்தம் கட்டாயக் கடமை ஆதல் போல் குடும்பத் தலைமைக்கும் நலம் பேணலில் படைத்தலைமை போல் உறுதியுடனும் எதிர்கால நோக்குடனும் ஈடுபடுதல் வேண்டும். இத்தனைபேர் இருக்கவும் எனக்கொன்ன வந்தது என எண்ணும் படைத்தலைமை ஒன்று உண்டாயின் படைவீரர் உறுதியும் வலிமையும் சூழ்ச்சித் திறனும் கூடப் பயன்படுமோ? அதனால்,

"அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை'

""

என்னும் குடி செயல் வகைக் குறளொடு,

“நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்"

(1027)

(770)

என்னும் படை மாட்சிக் குறளும் ஒப்பிட்டுக் காணத்

தக்கனவாம்.