பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் -39

முன்னது, "போர்களத்தில் போர்தாங்கும் பொறுப்பு வலியவன்மேல் அமைவது போல் குடும்பக் களத்திலும் அப்பொறுப்பைத் தாங்குவார் மேலேயே பொறுப்பு அமையும் என்னும் பொருளும்,

"

பின்னது, 'போரில் நிலைபெற நிற்கும் பழமையான வீரர் பலரையுடையதாக இருப்பினும், தகுதிவாய்ந்த தலைமக்கள் இல்லாத படை தகுதியில்லாத படையேயாம்" என்னும் பொருளும்

உடையவையாம்.

'தமரகம்' என்பது தம்மவர் வாழும் அகம் அல்லது வீடு என்னும் பொருளதாதல் அறிந்து கொள்க. வீழும் குடியை வாழும் குடியாய் அமைக்கப் போர்க்கால நடவடிக்கை எடுப்பார் போல எடுத்தல் வேண்டும் என்பது இவற்றின் பிழிவாம்.

தனிக் குடும்பம்

இனி வள்ளுவர் காணும் தனிக் குடும்பத் கணவன் மனைவி மக்கள் என்பரைக் கொண்டது. அவர்களைப் பற்றியவை இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட் பேறு என்னும் மூன்றதிகார வைப்பாக உள்ளவை. அக்குடும்ப மூலவராம் தாய் தந்தையர்க்கு, நின்றதுணையாக இருக்கும் இல்வாழ்க்கை அது சிக்கலுக்கு ஆட்பட வேண்டுதல் இல்லாச் சிறு குடும்பத் அது.

இல்வாழ்க்கையின் முதற் குறளே இந் நாளில் முதியர்க் குள்ள சிக்கல் தீர்வாக அமைந்துள்ளது.

முதியவர்களுக்கும் வளரும் இளையவர்க்கும் ஒட்டுற வில்லாத இடைவெளி பெருகிக் கொண்டு வருகின்றது.

பெற்றவர்கள் தாம் எவ்வளவோ செய்திருந்தும் அச்செய்ந் நன்றியை உணராமல் மக்கள் தம்மைப் புறக்கணிப்பதாகப் புழுங்குகின்றனர்.

தாம் எவ்வளவோ முயன்று முயன்று பணி செய்தும் உதவியும் கூடப் பெரியவர்கள் ஒத்து போக முடியாத பிடிவாதக்காரராக இருந்து பெரும்பாடுபடுத்துகின்றனர் என மக்கள் ஏங்குகின்றனர்.

"முதியவர் இல்லத்திலோ ஏதிலியர் இல்லத்திலோ தாம் சேர்ந்து விடுவதே தக்க தீர்" வென முடிவெடுக்கின்றனர் முதுவர்.