பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

கேடு

இளங்குமரனார் தமிழ்வளம் - 39 ஓ

நல்லவர் தொடர்பு இல்லாமை பல்லபலா பகையினும்

(450)

தம்மில் பெரியவர் துணை வன்மையுள் வன்மையாம் (444)

என்றெல்லாம் பெரியாரைத்

வவியுறுத்துகிறார் வள்ளுவர்.

துணைக்

கோடலில்

மனநலம் நன்கு அமைந்தவர்க்கும் இனநலம் வேண்டும்

இனநலம் எல்லாப் புகழும் தரும்

(458)

(457)

மனம் தூய்மையும் செயல் தூய்மையும் இனந்தூய்மை

தருதலால் உண்டாகும்

(455)

இத்தகையன் அவன் என்பதை அவன் சேர்ந்த இனமே

காட்டும்

(453)

நிலத்தின் தன்மைபோல் நீரும் மாறும்; அதுபோல் இனத்தின் தன்மை போல் இயல்பும் ஆகும்

(452)

நல்லினத்தினைப் பார்க்கிலும் நன்மையாவதும் இல்லை; தீய இனத்தினைப் பார்க்கிலும் அல்லல் ஆக்குவதும்

ல்லை

(460)

என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

சிற்றினம் சேர்ந்ததால் கெட்டுப் போகும் சிறார் உண்டு என்றால், அபப்டிச் சேராமலேயே கெடுவாரும் அலரா எனவே வினவத் தோன்றும்.

பெற்றோரே குடியராக இருந்தால், வீட்டுப் பாடமும் அதுவே ஆகி விடாமல் என்ன செய்யும்?

பெற்றோரே பொய்யரும் புரட்டரும் வஞ்சரும் சூதருமாக இருப்பின் அவையெல்லம் மக்களுக்குக் கற்காமல் கற்கும் குடும்பப் பாடம் ஆகிவிடுதற்கு ஐயமுண்டா?

வெள்ளையில் எந்த வண்ணமும் தெளிவாகப் பதியும்.

பிள்ளையின் உள்ளத்திலும் எச்செயலும் எக்காட்சியும் எச்சொல்லும் பதியும். ஆதலால் வீட்டிலேயும் நல்ல சூழல்