பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

255

எனக் கேட்கும் முறையால் வள்ளுவர் பகட்டைச் சுட்டுவதுடன் அதன் வேண்டாமையையும் குறிப்பிடுகிறார். அது,

“பிணையோர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து’

GTLIGI (1089).

55

இனி, இயற்கை இயல் செயல்களே அணிகலங்கள் என்பதையும் குறிக்கத் தவறினார் அல்லர்.

அவன் பார்க்கிறான்; அவளும் அன்பால் நோக்கி மெல்ல நகைக்கிறாள்; அதனைக் கண்ட அவன் "அசையும் கொடி போலும் இம்மெல்லியலபளின் உள்ளத்தில் ஓர் அழகிய குறிப்புளது" என் அறிகின்றான்.

“அசையியற்கு உண்டு ஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பிசையினள் பைய நகும்"

(1098)

“அழகிய மணியின் ஊடே விளங்கித் தோன்றும் நூலைப் போல, என் துணைவியின் அழகுக்குள்ளே விளங்குவதாகி

குறிப்பொன்றுளது" என் நினைக்கிறான்.

“மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன் றுண்டு"

(1273)

திரண்டு மலர உள்ள மொக்கினுள்ளே இருக்கும் நறுமணத்தைப்போல் எண் துணைவியின் புன்முறுவலுக் குள்ளே மனது கிடக்கும் நல்ல குறிப்பொன்று உண்டு" என்று நினைக்கிறான்.

'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு"

(1274)

இவ்வாறு நினைத்த தலைவன், "கண்ணில் நிரம்பித் தோன்றும் பேரழகு அமைந்த மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடையவளுக்குள்ள பெண்மைக்குணம் பெரிதே யாம் எனப் பாராட்டுகிறான்.

"கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது”

(1272)