பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம்-39

இவ்வாறு கண்டும் பாராட்டியும் களித்த தலைவன் இவள் பெண்மைச் சீர்மை பகட்டாம் ஆடை அணிகளால் இல்லை; இயல்பாக அமைந்த பெண்மைத் தன்மையே பெருமைத் தன்மையாய் உடையது என்கிறான்.

"பெண்ணினால் பெண்மை உடைத்து

என்பது அது.

95

(1280)

வேறோர் அணிகலம் வேண்டா இயற்கை அழகே பெண்மை என்றும், அவ்வியற்கைப் பெண்மைப் பண்பே பெருந்தக்க பெண்மைப் பிறப்புச் சான்றாக இலங்குவது என்றும் அறிந்து கொள்வார். கொள்ளை அணிகலத்தில் கொள்ளைப் பற்றுக் கொள்ளார். கேடுகளுக்கும் போட்டி பொறாமை களுக்கும் வறுமை வன்கண்மைகளுக்கும் ஆட்படார்.

விருந்தோம்பல்

'விருந்தோம்பல் உயர்பண்பாடு என்றும், அதனைச் செய்வதற்காகவே இல்லற வாழ்வு உண்டு என்றும் செல்வம் இருப்பினும் விருந்தோம்பாதார் செல்வம் வறுமைப்பட்டதே என்றும் அதனைச் செய்யாதவர் மடவர் என்றும், விருந்தோம் புவான் வாழ்வு எவ்வகையாலும் கேடுறாது என்றும் வள்ளுவர் கூறுகிறாரே! எம் வறிய நிலையில் எம் வாழ்வையே நடாத்த இடராம் நிலையில் எவரை விருந்தோம்ப இயலும்' என மறுப்பாரும்,"அந்நாள் பண்டமாற்றுக் காலம் கையிருப்புப் பொருளைக் காசாக்க இயலாது அதனால் விருந்தோம்பல் சரி, மேலும் இந்நாளில் எங்கெங்கும் தங்கல் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள; அவ்வாறாகவும் விருந்தோம்பல் வேண்டும் என்பது பொருளியல் அறியாப் போக்காகும்" என்பரும் உளர்.

விருந்து என்பது தொடர்பு இலராய்ப் புதியராக வந்த வர்க்குச் செய்யும் உதவியாகும். அவர் துறவோரோ, ஊணிலா ரோ, அறிந்த அறிவரோ அல்லர். அவர் அயலூர் வழிப்போக்கர். செல்வாரும் வருவாரும் ஆவரே அன்றித் தங்குவார் அல்லர். அவருள் நாம் விரும்பித்தேடினும் அகப்படாத ஆன்றோரும் சான்றோரும் கூட இருப்பர். அத்தகையர் குடும்பத்துக்கு வருதலால் செலவு இல்லை; வரவேயாம்; அவர்தம் மேதக்க அறிவும் பண்பும் அருள் நெறியும் வாழ்வுக் கொடையாய் வாய்ப்பதாகும். அதனாலேயே கணவன் மனைவியர் பிணக்கங் கொண்டிருந்த போதிலும் விருந்தோம்புதல் மேற்கொண்டு தன்