பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|272

நாடு

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

நாட்டின் இலக்கணம் கூறவரும் வள்ளுவர்.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு'

என்றார். அதே நாடு,

"

“பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு"

என்றும் கூறினார்.

"

தன்னிலையில் சிறத்தலும் தாழ்வுற்று வருவாரைத் தாங்கலும் ஆகிய இறைமை மல்குவதே நாடு எனின், நாம் பட்டுவரும் உலகக் கடன்களை எண்ணிப் பார்க்கவே வள்ளுவர் வகுத்த நாட்டின் இலக்கணத்தொடு சிறிதும் ஒட்டாமல் செல்லுதல் விளக்கமாம். அதன் அடிப்படை என்ன?

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’

என்பதை யுணர்ந்து திட்டமிட்டுக் கொள்ளாமையும்,

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்”

என்னும் ஈரறங்களையும் போற்றிக்

கொள்ளமையுமேயாம்.

கடைப்பிடியாகக்

இன்றியமையாப் பொருள்களை ஏற்றுமதியாக்கிக் கெடுத்தலும் தேவையற்றதும் போலிக்கும் புன்மைக்கும் மயக்குக்கும் இடமாவதாம் பொருள்களை இறக்குமதியாக்கிக் கெடுத்தலும் ஆகிய இவற்றைவிட்டாலே நாடு நாடாமே.

வறுமை

இல்லாமை இல்லாமையாய்ச் செய்தல் வேண்டும் என எண்ணி எண்ணி இரங்கித் திட்டமிட்ட உள்ளம், வள்ளுவர் உள்ளம். 'இரவு உள்ள உள்ளம் உருகும்' என்று கருதியது அவர் உள்ளம். அவ்விரவினை முற்றாய் ஒழிக்கத் திட்டமிடாத அரசை ஒழிந்து போகுமாறு வெம்பி உரைத்ததும் அந்த உள்ளம். அவ்விருப்பை ஒழிப்பதற்காக இல்லறத்தாரும் தம்பங்கைச்