பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்கு

289

நிறைவு. சான்றாண்மை அறிவு, பண்பு ஆகியவற்றின் நிவை நலங்கள் ஆகும் தன்மையாகும்.

ஊராளும்,நகராளும், நாடாளும், உலகாளும் திறவன் என்பான் சால்பாளும் திறவனாக இருப்பின் அவை அவை நலம் பெற்றோங்கும். குறைவிலா நிறைவுச் சான்றாண்மை எங்கெங்குண்டோ அங்கங்கெல்லாம் சிக்கல் தீரும்; குறை நீங்கும்; நிறை மல்கும்.

46

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்”

எனந் சான்றாண்மையாளர் உறுதிப்பாட்டை உரைப்பார் வள்ளுவர்.இச்சான்றாண்மைப் பயன் என்ன? அப்பயன் செய்யாக்கால் விளையும் விளைவு என்ன? இவற்றைக்,

66

'கடனென்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

"சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை”

என்பார்.

சான்றவர் சான்றாண்மை குன்றிப் போனால் உலகம் உய்யாது என்கிறாரே; இதே போல்,

“பண்புடையார்ப் பட்டுண்டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்”

என்றும் கூறுகிறாரே! இவற்றின் நோக்கம் என்ன?

சான்றோர் பண்புடையோர் என்பார் உலகக் காவலர்; நெறிமுறைக் காவலர்; பண்பாட்டுக் காவலர்-என்பதேயாம்.

அவர் எவ்விடத்துக் கண்டிக்க வேண்டுமோ, திருத்த வேண்டுமோ, இடித்துரைக்க வேண்டுமோ, வழிகாட்ட வேண்டுமோ அவற்றை அவ்விடத்துச் செய்தல் வேண்டும்.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

“இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமை யவர்”