பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இறுதிப் போலி :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இதுவும் மூவகைப் போலிகளுள் ஒன்று. பால்பகா வஃறிணைப் பெயர்களிடத்து ஈற்றிலே நின்ற மகர மெய் னகரமெய்யோடு ஒத்து நடப்பவை உண்டு. அவ்வாறு வருவது போலி எனப்படும்.

(எ.டு) அகம்

=

அகன், கலம் = கலன் நிலம் = நிலன்.

இன்னாமை என்னும் பண்பை யுணர்த்தும் உரிச்சொற்கள் : செல்லலும் இன்னலும் இன்னாமை என்னும் பண்பை யுணர்த்தும் உரிச்சொற்களாகும்.

66

(எ-டு) மணங்கமழ் வியன் மார்ப னணங்கிய செல்லல்

ஈரறிவுயிர் :

“வெயில் புறத்தரூஉ மின்னலியக்கத்து

சு

""

""

உடம்பினால் அறியும் அறிவோடு நாவினால் கைப்பு, காழ்ப்பு, துவர்ப்பு முதலிய சுவைகளை அறியும் அறிவையும் பெற்றிருப்பவை ஈரறிவுயிர்களாகும். அவை நந்து, சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, முரள், இப்பி, கிளிஞ்சல், ஏரல் என்பன.

‘உகப்பு’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

உகப்பு என்னும் உரிச்சொல் உயர்தல் என்னும் பண்பை யுணர்த்தும்.

(எ.கா) ‘விசும்புகந்தாடாது

உசா’ வென்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

உசாவென்னும் உரிச்சொல்

சூழ்ச்சி

யென்னுங்

குறிப்புணர்த்தும்.

(எ.டு) உசாத்துணை'

உடனிகழ்ச்சிப் பொருள் :

வினை கொண்டு முடியும் பொருளின் தொழிலைத் தன்னிடத்தும் உடனிகழ்வதாகவுடைய பொருளாம். அது தலைமைப் பொருளும், தலைமையில் பொருளும் என ருவகைப்படும். தலைமைப் பொருளாவது வினை கொண்டு முடியும் பொருளினுயர்வுடையது. தலைமையில் பொருளாவது வினைகொண்டு முடியும் பொருளினிழிவுடையது.