பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

107

அவனோ கொண்டான் இதில், அவன் கொண்டிலன் என்னும் பொருளைத் தருமிடத்து, எதிர்மறை.

ஆணோ அதுவும் அன்று பெண்ணோ அதுவும் அன்று அத்தன்மையில்லாமையைத் தெரிவித்தால் தெரிநிலை.

இதில்,

நன்மையறியாமற் கெட்டவர்களை ஓ ஓ தமக்கு ஒரு நன்மையும் உணரார் என்றதில், கழிந்ததற்கு இரங்குதலால் கழிவு.

'சொல்லுவேன் கேண்மினோ' - இதில் சொல்லுவேன் கேண்மின் என பொருள் பட்டு ஓகாரம் வேறு பொருள் இல்லாமல் நிற்றலால் அசைநிலை. அவர்களுள் இவனோ கொண்டான் இதில் பலரினின்று ஒருவரைப் பிரித்து நிற்றலால் பிரிநிலை.

‘ஓசை’ என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் :

முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குறை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு, அமலை, துழனி, ஓகை, கரை ஆகியவை ஓசை என்கின்ற குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும்.

(எ.டு) முழக்கு

முழங்குகடல்

குடிஞையிரட்டும்

ஒலிபுனலூரன்

கலிகெழுமூதூர்

இரட்டு

ஒலி

கலி

துவை

பல்லியம் துவைப்ப

இசை

பிளிறு

இரை

இரங்கு

அழுங்கு

இயம்பல்

இமிழ்

குளிறு

அதிர்

பறையிசையருவி

பிளிறுவார் முரசு

இரைக்கும் புனல்

இரங்கு முரசினம்

மாரியழுங்கின மூதூர்

முரச மதியம்ப

இமிழ் கடல்

குளிறுமுரசும்

களித்ததிருங்கார்