பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம்

குரை

குரைபுனலாறு

கனைகடல்

கனை

சிலை

சிலைத்தார் முரசம்

சும்மை சும்மை மிகு நாடு

கம்பலை

அரவம்

கம்பலைமூதூர்

அரவத்தானை

4

ஆர்ப்பு ஆர்த்த பல்லியம்

'ஓடு' - ‘தெய்ய' என்னும் இடைச் சொற்கள் :

ஓடு, தெய்ய என்கின்ற இரண்டும் பொருளைத் தருகிற இடைச் சொற்களாகும்.

66

தசை சை

நிறைப்

(எ-டு) 'விதைக்குறு வட்டில் போதோடு பொதுள "சொல்வேன் தெய்ய நின்னோடும் பெயர்த்தே

ஓரறிவுயிர்க்கு உரிய இளமைப் பெயர்கள் :

""

பிள்ளை, குழவி, கன்று, போத்து என்று கூறப்பட்ட நான்கு இளமைப் பெயர்களும் ஓரறிவுயிர்க்கு உரியனவாம். ஆனால், நெல்லும் புல்லுமாகிய இரண்டு ஓரறிவுயிர்களும் இளமைப் பெயர்களைப் பெறாவாம்.

ஓரறிவுயிர் :

வெப்பம், தட்பம், வன்மை, மென்மை ஆகியவற்றை உடம்பினால் அறியும் அறிவு உடையவை ஓரறிவுயிர் எனப்படும். அவை புல்லும் மரமும் அதன் கிளைப்பிறப்பாகிய கொட்டி தாமரை முதலியனவாம்.

ஒரெழுத்தொரு மொழிகள்

உயிர் வருக்கத்தில் ஆறும், மவ்வருக்கத்தில் ஆறும், தவ்வருக்கத்தில் ஐந்தும், பவ்வருக்கத்தில் ஐந்தும், நவ்வருக்கத்தில் ஐந்தும், கவ்வருக்கத்தில் நான்கும், வவ்வருக்கத்தில் நான்கும், சவ்வருக்கத்தில் நான்கும், யவ்வருக்கத்தில் ஒன்றுமாக நெட்டெழுத்துக்களாலாகிய மொழி நாற்பதும், நொ, து ஆகிய இரு குற்றெழுத்து மொழிகளும் சேர்த்து ஓரெழுத்தொரு மொழிகள் நாற்பத்திரண்டாகும்.

ரு