பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

நடப்ப

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எய்துப

மொழிப

கொண்மார் என மார் விகுதி வினையுடன் முடிந்தது.

பழுது என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

பழுது என்னும்

உரிச்சொல்

பயனின்மையாகிய

குறிப்பையுணர்த்தும்.

(எ.டு) “பழுது கழி வாழ்நாள்

பால்வழுவமைதி :

""

மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால் ஒருபாற் பொருள் வேறு பாற் பொருளாகவுஞ் சொல்லப்படும்.

1.

2.

3.

4.

(எ-டு)

தன் புதல்வனை ‘என் அம்மை வந்தாள்' என்பது உவப்பினால் ஆண்பால் பெண் பாலாயிற்று.

ஒருவனை ‘அவர் வந்தார்' என்பது உயர்த்திச் சொல்லுதலால் ஒருமைப் பால் பன்மைப் பெயராயிற்று.

""

"மகிழ்வார்க்கும் அல்லார்க்கும் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரன் என்பது சிறப்பினால் ஆண்பால் பெண் பாலாயிற்று.

66

எனைத் துணைய ராயினும் என்னாம் தினைத் துணையுந் தேரான் பிறனில் புகல்” என்பது கோபத்தினால் பன்மைப் பால் ஒருமைப் பாலாயிற்று.

5. பெண்வழிச் செல்பவனை (இவன் பெண் என்பது) இழிவினால் ஆண் பால் பெண் பாலாயிற்று.

பிண்டத்திற்கு இலக்கணம் :

சூத்திரம் பலவற்றைப் பெற்று ஓத்தும் படலமும் இன்றி வரினும், ஓத்துப் பலவுண்டாகிப் படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும், அதற்குப் பிண்டம் என்று பெயர் (பிண்டம் பிடித்து வைக்கப்பட்ட திரளை).

=