பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வருந்திக் கூறுதல் ஆகிய பதினான்கும் ஒருசார் பகற்குறிக்குரிய கிளவிகளாகும்.

ஒருவழித் தணத்தல் :-

வரைவு கூறிய தோழியோடு வரைதற்கு உடன்பட்ட தலைவன் தன் ஊர்க்கு ஒருவழிப் போய் வருகிறேன் என்று கூறிப் போதல் ஒருவழித்தணத்தலாகும்.

தணத்தல் = பிரிதல்.

ஒருவழித் தணத்தலின் வகை

தலைவன் தான் ஒருவழித் தணந்து செல்லும் செலவைப் பாங்கிக்குத் தெரிவித்தலும், அவள் அதனைத் தலைவிக்கு அறி வித்தலுமாகிய செலவறிவுறுத்தலும், தலைவன் செலவைப் பாங்கி தடுத்தலாகிய செலவுடன் படாமையும், தலைவன் தான் செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று கூறிப் பாங்கியை உடன்படச் செய்தலாகிய செலவுடன் படுத்தலும், தலைவன் செல்வதற்குப் பாங்கி உடன்படலாகிய செலவுடன்படுதலும், தலைவன் ஒருவழித் தணந்தபோது தலைவி மனங்கலங்கி வருந்துதலாகிய சென்றுழிக்கலங்கலும், தோழி தலைவியின் மனந்தெளியும் படியான சொற்களைச் சொல்லி அவற்றால் அவள் துன்பம் ஆறும்படி செய்தலாகிய தேற்றியாற்றுவித்தலும், மீண்டு வந்த தலைவன் பாற் பாங்கி வருந்திக் கூறுதலும், தன் பிரிவினால் தலைவிக்கும் தோழிக்கு முண்டாய துன்பத்திற்காகத் தலைவன் வருந்திக் கூறுதலுமாகிய வந்துழி நொந்துரையுமாகிய ஏழும் ஒரு வழித்தணத்தலின் வகைகளாகும்.

ஒருவழித் தணத்தலின் விரி :

தலைவன் தன்னாட்டிற்கு ஒரு வழித்தணந்து செல்ல விரும்பியதைத் தோழிக்குக் கூறுதலும், தோழி தலைவன் சலவைத் தடுத்தலும், தலைவன் தான் செல்ல வேண்டியதன் இன்றியமையாமையைக் கூறிச் செலவிற்கு உடன்படுமாறு கூறுதலும், பாங்கி தலைவனை ஊர்க்குப் போய் வருகவென விடுத்தலும், தலைவன் செலவைப் பாங்கி தலைவிக் குணர்த்தலும், தலைவன் செலவையறிந்த தலைவி வருந்துதலும், தலைவன் மாலைக் காலமளவும் வாராது வரவு நீடித்தலாற் காம