பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

காமக்கிழத்தியர் இலக்கணம் :-

185

சேரிப்பரத்தையர் போலப் பலர்க்கும் உரியாரன்றி ஒரு வற்கே உரிமை பூண்டு வருங்குலப் பரத்தையர் மகளிராய்க் காமங்காரணமாகத் தலைமகனால் திருமணம் சய்து கொள்ளப்பட்டவர் காமக்கிழத்தியராவர்.

கார்காலத்தின் தன்மை :-

வாடைக் காற்று வீசலும்; செம்மூதாயும் (இந்திர கோபமும்) மயிலும், (கேகயப் பறவையும்) தோன்றி மகிழ்தலும்; வெண் காந்தள், செங்காந்தள், கொன்றை, கூதாளம், வேங்கைமரம், காக்கணஞ்செடி, முல்லை, கடம்பு, காயா முதலியன மலர்தலும்; அன்னம்கிளி குயில் அகவலும், கன்றுவருதலும், தாமரைமலர் நீரில் மறைதலும் கார்க்காலத்துத் தன்மைகளாகும்.

காவற்பிரிவின் வகை

தலைவன் நாடு காத்தற் பொருட்டுப் பிரியும் பிரிவு காவற் பிரிவாகும். அப்பிரிவு, அறப்புறங்காவல், நாடுகாவல் என இரு வகைப்படும். அறப்புறங்காவலாவது. அறத்திற்கு விடப்பட்ட நிலம், அறச்சாலை முதலியவற்றைக் காத்தலாம்.

காவற் பிரிவிற்கு உரியார் :

அறப்புறங்காவல் அரசர் முதலிய அனைவர்க்கும் உரியதாம். அரசனும், அரசனாற் சிறப்புப் பெயர் பெற்றவரும் நாடுகாவற் பிரிவிற்குச்சிறப்பாக உரியராவர்.

காலமாகிய முதற்பொருளின் வகை

பொழுது என்னும் முதற்பொருள், பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டு பாகுபாட்டினை யுடையதாம்.

கிழத்தி மகிழ்ச்சி :-

தலைவியின் மகிழ்ச்சி. இது தலைவிதான் வருந்தா திருந்ததன் காரணத்தைப் பாங்கிக்கு உரைத்தலால் விளங்கும். கிழவோன் மகிழ்ச்சி :-

து

தலைவன் மகிழ்ச்சி - இது தலைமகன் தலைவியின் முன் பாங்கியைப் புகழ்தலால் விளங்கும்.