பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்”

இஃது ஈதற் சிறப்பு.

“தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்துவிடும்”

இஃது ஏற்றற் சிறப்பு.

அன்பு முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம்:

மதிலின் உள்ளே யிருப்பவன் வெளியே (புறத்தே) உள்ள வனைத் தன் செல்வ மிகுதியானன்றிப் போர்த்தொழிலான் வருத்தியதைக் கூறுவதாம்.

(எ.டு)

“கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னா ளினியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் தூற்றயற் கிடப்பப் களையாக் கழற்காற் கருங்கனாடவர்

உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப

யுருமிசை கொண்ட மயிர்க்கட்

டிருமுரக சிரங்வூர்கொள்குவமே'

ஆகோள்:

வெட்சி மறவர் பகைவர்களை வென்று கன்றுகளுடன் அவர்களது பசுக் கூட்டங்களைக் கவர்ந்தது ஆகோள் என்னும் துறையாம்.

(61.6)

“கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால் நெடுவரை நீள்வேய் நரலும்-நடுவூர்க்

கணநிரைக் கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிரை.