பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்றான் உளன்.

ஆள்வினை வேள்வி:

231

தான் மேற் கொண்ட தொழில் வெற்றி பெற்ற மன்னனது இல்லறச் சிறப்பைக் கூறியது ஆள்வினை வேள்வி என்னும் துறை யாம்.

(எ.டு)

“நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகில் ஒன்ற உயிர்களிப்ப ஓம்பலால்-வென்றமருள் வாள்வினை நீக்கி வருக விருந்தென்னும் ஆள்வினை வேள்வி யவன்.

ஆற்றுப்படையின் இலக்கணம்:

பொருள் பெற்று வருகின்ற இரவலன் ஒருவன், பொருள் பெற விரும்பி எதிரே வருகின்ற இரவலன் ஒருவனிடம், தாம் பெற்ற செல்வம் போல அவருக்கும் கிடைத்தற் பொருட்டு,

ன்ன வழியே சென்று இன்னானை அடைவீர்களாயின் எம்போன்று பெருஞ் செல்வம் அடைவீர், என்று ஆற்றுப் படுத்துவது ஆற்றுப்படையின் இலக்கணமாகும்.

ஆனந்தம்-அ:

தன் கணவற்குப் புண்ணோம்பு வாளொருத்தி விரிச்சியும் நிமித்தமும் தீயனவாதல் கண்டு அஞ்சி நடுங்கியது ஆனந்தம் என்னும் துறையாம்.

(எ.டு)

“வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவம் தாங்கினான்

சாந்தார் அகலத்துத் தாழ்வடுப்புண்-தாந்தணியா மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும்

என்னாங்கொல் பேதை இனி.’

ஆனந்தம்-ஆ:

மிகப்பெரிய போர்ச்செயலில் தலைப்பட்டா னொரு மறவனுக்கு அவன் காதலி இரங்குதலும் ஆனந்தம் என்னும் துறையாம்.